என்னது இமய மலைக்கு மேல விமானம் பறக்காதா! Why Airplanes Not Flying Above the Himalayan Mountain in Tamil
இமயமலையில் மட்டுமல்ல, பசிபிக் பெருங்கடலுக்கு மேலேயும் விமானங்கள் பறப்பதில்லை. அதிக தூரம் மற்றும் உயரத்தை கடக்க வேண்டிய நிலையில், விமானிகள் பறப்பதற்கு மாற்று பாதைகளை தேர்வு செய்கிறார்கள். விமானங்கள் இமய மலையின் மேல் பறக்காமல் இருப்பதற்க்கு முதல் மற்றும் முக்கிய காரணம் இமயமலையின் உயரம். இமயமலையைப் பற்றி கூறவேண்டுமானால், இமயமலையின் அனைத்து சிகரங்களும் 20,000 அடிக்கு மேல் உள்ளன. சாதாரனமாக விமானங்கள் 30,000 அடிக்கு மேல் ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கில் பறப்பதால், வானிலை தொடர்பான அனைத்து இடையூறுகளையும் தவிர்க்கிறது எனினும் இமய மலை பகுதிகளில் சிகரங்கலே 20000 அடி உயரங்களை பிடித்து கொள்கின்றன இதுவே விமானங்கள் பறக்க இமய மலை பகுதிகளை தவிற்ப்பத்தற்க்கான முக்கிய காரணம். பிற எதிர்மறை காரணங்களும் உள்ளன: 1. அவசரமாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு இல்லை விமானிகள் பசிபிக் பெருங்கடலுக்கு மேல் பறப்பதைத் தவிர்த்து, அதை சுற்றி செல்லும் வழிகளைத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் விமான நிறுவனங்களுக்கு கடலைக் காட்டிலும் நிலத்தின் மீது பறப்பதால் அவசர காலத்தில் தரையிறங்க பாதுகாப்பு சற்று அதிகம். எனவே அவர்கள் கடலில் க...