கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சலை எப்படி சரி செய்யலாம்! Home Remedy of Heart Burn for Pregnant Womens in Tamil
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளில் பல பெண்களுக்கு பெரும் அவதியை கொடுப்பதில் ஒன்று தான் நெஞ்சு எரிச்சல். நிறைய கர்ப்பிணிகள் இந்த பிரச்சனைக்கு அதிக அளவில் கஸ்ட்ட படுவார்கள். இந்த பிரச்சனை கர்ப்பமாக இருக்கும் போது சிலருக்கு ஆரம்பத்தில் மட்டும் ஏற்படும் சிலருக்கோ குழந்தை பிறக்கும் வரைக்கும் கூட ஏற்படும்.
பெண்களின் ஹார்மோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாக சுரப்பதனால் தான் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றிற்கும், உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள வால்வானது சரியாக இயங்காமல் போகிறது. எனவே, வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்கு வந்து, எரிச்சலை உண்டாக்குகிறது. அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருக்கும் போது வாந்தி வருவதால், பெண்களால் எதையும் சரியாக சாப்பிட முடிவதில்லை. இதனால் அசிடிட்டி ஏற்பட்டு, நெஞ்சில் எரிச்சல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை நீக்க வீட்டில் உள்ள சாதாரன பொருட்களே போதும். அது என்ன அவற்றை எப்படி பயன்படுத்தி எளிதாக கர்பினி பெண்ணின் நெஞ்சு எரிச்சலை சரி செய்யலாம் என தொடர்ந்து பார்க்கலாம்.
சரியான உணவு பழக்கம்
நெஞ்சு எரிச்சல் இருக்கும் போது, அதிகமான காரம் உள்ள உணவுகள் மற்றும் டீ,காப்பி,எண்ணெய் அதிகம் உள்ள உணகள், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அவ்வப்போது, ஏதேனும் ஜூஸை சிறிது சிறிதாக குடித்துக் கொண்டு இருந்தால், எரிச்சல் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம். மேலும் சரியான நேரத்திற்க்கு உணவு எடுக்க வேண்டும்.
கொமட்டல்,வாந்தி வந்தாலும் சற்று மனதை தைரிய படுத்தி சாப்பிட வேண்டும். போதுமான ஆகாரம் வயிற்றில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ்
மிதமான குளிரூட்ட படாத நீரில் எலுமிச்சை பழத்தை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் நெஞ்சு எரிச்சலை விரைவில் தடுக்கலாம். மேலும், எலிமிச்சையானது உடலுக்கு புத்துனர்வும் கொடுக்கும்.
சூயிங் கம் மெல்லலாம்
உண்மையில் சூயிங் கம் சாப்பிட்டால், அதனை மெல்லும் போது, வாயில் சுரக்கும் அதிகப்படியான எச்சிலானது, வயிற்றில் சென்று, அவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் ஆபத்தை தடுத்து, எரிச்சலைத் தடுக்கும்.
இஞ்சி
இஞ்சி ஒரு சிறந்த மருத்துவப் பொருள். இந்த இஞ்சியை பயன்படுத்தி பல ஆயுர்வேத மருந்துகள் செய்யப்படுகின்றன. அதிலும் இந்த மருந்துகள் அனைத்தும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்ததாக உள்ளது. எனவே இந்த இஞ்சி கர்ப்பிணிகளுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதற்கு அவர்கள் டீ போன்று, சூடான நீரில், சிறிது இஞ்சி மற்றும் சர்க்கரையை போட்டு கொதிக்க விட்டு, குடித்தால், நெஞ்சு எரிச்சலைத் தடுக்கலாம்.
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தை கொஞ்சம் பாலில் சேர்த்து அதை நன்றாக காய்ச்சி நெஞ்சு எரிச்சலின் போது சாப்பி்ட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
தண்ணீர்
கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆகவே அவ்வப்போது எரிச்சல் ஏற்படும் போது சிறிது நீரைக் குடித்து வர எரிச்சல் சரியாகும்.
குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
மருந்துகள்
இவைகள் தவிற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மருந்துகளை உட்கொள்ளுவதன் மூலமாகவும் நெஞ்சி எரிச்சலை கட்டுபடுத்தலா.








Comments
Post a Comment