ஒரு நாட்டின் பாதுகாப்பும், பலமும் நாட்டினுடைய ராணுவத்தை சார்ந்தே
உள்ளது. சில சமயங்களில் எல்லைகளை விரிவு படுத்தவும் பல சமயங்களில்
பாதுகாக்கவும் இராணுவ மானது ஆயுதங்களுடன் போரிடுவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நாடுகளை பற்றிய தகவல்கள்
உங்களுக்கு நகைச்சுவையாகவும் தோன்றலாம் ஆனால் இது உண்மையாக நடந்த சம்பவம்.
ஈமு
கோழியை பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். சில வருடங்களுக்கு முன் தமிழ்
நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கூட ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட இந்த ஈமு
கோழி உடன் தான் ஆஸ்திரேலியாவில் ஒரு போரே நடந்துள்ளது.
முதல் உலகப்போர் முடிந்த சமயத்தில் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளை சரி செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில்தான் ஈமு கோழிகளால் பல பிரச்சினைகள் நேர்ந்தது. பொதுவாக ஈமு கோழிகள் வருடத்தின் ஒரு பருவத்தில் அடர்ந்த காடுகளிலும் மற்றொரு பருவத்தில் கடற்கரைகளிலும் உணவிற்காக இடம்பெயர்ந்து வாழும் தன்மை கொண்டவை. ஆனால் இங்கு விவசாயம் செழிக்க ஆரம்பித்தால் ஈமு கோழிகள் தொடர்ந்து அதே இடத்தில் தங்கி விவசாய நிலங்களை உணவிற்காக சூறையாட ஆரம்பித்தன.
இதனால் பெரிய இழப்பிற்கு உள்ளான விவசாயிகள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து அவைகளை இயந்திரத் துப்பாக்கி கொண்டு தாக்க வேண்டும் என முறையிட்டார்கள். அது புதிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் சமயம் என்பதால் ஈமு கோழிகளை விரட்டுவது சிறந்த பயிற்சியாக இருக்கும் என எண்ணி பாதுகாப்பமைச்சரும் ஒப்புக்கொண்டார். உடனடியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு சில ராணுவ வீரர்கள் எந்திர துப்பாக்கிகளுடன் விவசாய நிலத்தை அடைந்தார்கள்.
முதல் நாள் திட்டம் தீட்டி விட்டு இரண்டாவது நாளிலிருந்து அவைகளை தாக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் சுதாரித்துக் கொண்ட ஈமு கோழிகள் மூன்றாவது நாளில் இருந்து சிறு சிறு கூட்டமாக வந்து பயிரை மேய்ந்து விட்டு ராணுவ வீரர்களை ஏமாற்றி விட்டுச் சென்றுள்ளன. கிட்டத்தட்ட 37 நாட்கள் நடந்த இந்தப் போரில் 20,000 ஈமுக் கோழிகளில் வெறும் 500 க்கும் குறைவானவைகளை மட்டுமே அளிக்க முடிந்துள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் ஆனதால் போர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட வீரர்கள் நாடு திரும்பினார்கள்.
அதற்குப் பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை தலைமை தாங்கிய மேஜர், "நாம் என்னதான் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினாலும் அந்த உயிரினங்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தங்களுக்குள் திட்டம் தீட்டி சிறுசிறு குழுக்களாக செயல்படுகின்றன". இது போன்ற ஒரு படை நம்மிடம் இருந்தால் உலகின் எந்த நாட்டையும் எளிதாக தோல்வியடையச் செய்து விடலாம் என கூறியுள்ளார்.
அதற்குப்பின் ஜேம்ஸ் மிட்சல் என்ற கவர்னரின் ஆர்வத்தால் மீண்டும் இரண்டாவது முயற்சி செய்து அதிலும் தோல்வியையே சந்தித்தார்கள்.
அதிக பொருட்செலவு ஏற்படும் தோல்வியடைந்ததால் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள உயிரினங்களை வேட்டையாடுபவர்ளுக்கு பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டிருப்பதால் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டன.
இதைப் பற்றி அறிந்த உயிரியல் ஆர்வலர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் நடந்தது 1932இல் என்பது குறிப்பிடத்தக்கது.
2. புராஜெக்ட் இசபெல்லா - project isabella
இந்தப் போர் எக்குடாஸ் நாட்டின் கலபகோஸ் என்ற தீவில் ஆடுகளுக்கு எதிராக நடந்தது. முதலில் அந்த தீவில் ஆடுகளே கிடையாது. முதலில் ஸ்பானிஸ் காரர்களே உணவிற்காக பயன்படும் என சில ஆடுகளை விட்டுள்ளார்கள். ஆனால் இந்த செயல் அங்குள்ள கடற் கொள்ளையர்களுக்கு சாதகமாக இருந்ததால் சில நாய்களை அனுப்பி அந்த ஆடுகளை அழிக்க எண்ணினார்கள். அதன்பின் 1959இல் மீன் பிடிக்க சென்றவர்கள் மூன்று ஆடுகளை அந்த தீவில் விட்டு விட்டு சென்றுள்ளார்கள். அதில் இரண்டு பெண் ஆடும் ஒரு ஆடும் அடங்கும். அடுத்த 14 ஆண்டுகளில் மூன்று ஆடுகள் 30 ஆயிரம் ஆண்டுகளாக பெருகி தீவையே ஆக்கிரமித்துள்ளன. 1990இல் கிட்டத்தட்ட இதன் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைத் தொட்டது. இதன் காரணமாக தீவில் உள்ள உணவுகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் உலகின் கலப்பெகஸ் தீவில் மட்டுமே காணப்படும் கலபெகஸ் இன ஆமைகள் அழியத் துவங்கின.
தீவில் மற்ற கொன்றுண்ணிகள் ஏதும் இல்லாததால் ஆடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தது. அதனால் முதலில் சிங்கங்களை அனுப்பி ஆடுகளை அழிக்க எண்ணினார்கள். ஆனால் இரண்டரை லட்சம் ஆடுகளை அழிக்க எத்தனை சிங்கங்களை அனுப்ப என்பதை கருத்தில் கொண்டு வேட்டைக்காரர்களை அனுப்பினார்கள்.
ஆனால் அவர்களால் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை.
அதனால் குறிபார்த்து சுடும் பல வீரர்களை நியூசிலாந்தில் இருந்து வரவழைத்து ஹெலிகாப்டர்கள் மூலமாக சுட ஆரம்பித்தார்கள்.
இவர்கள் களத்தில் இறங்கிய ஒரே வருடத்தில் 90 சதவீத ஆடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் இவற்றுள் சில ஆடுகள் குகைக்குள் புகுந்து மறைந்து கொண்டு மீண்டும் தனது இனத்தை பெருக ஆரம்பித்தன. இதனால் முன்பு எடுக்கப்பட்ட போர் முயற்சியானது தோல்வியை சந்தித்தது. எனவே குகைகளில் மறைந்து உள்ள ஆடுகளை கண்டுபிடிக்க சில பெண் ஆடுகளைப் பிடித்து அவற்றின் கழுத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி தீவினுள் அனுப்பினார்கள். இப்போது அந்த ஆடுகள் செல்லுமிடமெல்லாம் இவர்களும் சென்று அங்கிருந்த ஆடுகளை அழித்து விட்டு இறுதியில் ட்ராக்கிங் சிப் பொருத்தப்பட்ட ஆடுகளை மட்டும் உயிருடன் விட்டு விட்டார்கள். இந்தப் போர் 1990 முதல் 2006 வரை காலபேகஸ் கான்செர்வெண்சி என்ற அமெரிக்க நிறுவனத்தால் முன்னின்று நடத்தப்பட்டது.
இந்த தீவில் தான் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டார்வின் தனது முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment