Skip to main content

இந்தியாவின் மிகவும் அழகான 10 பூக்கள்! 10 Most Beautiful Indian Flowers in Tamil

இந்தியாவின் அழகான பூக்கள்

பூக்கள் என்றாலே பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது. அவைகளை பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அழகான பூக்களை இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் தலையில் சூடி கொள்ளவும், பல நிகழ்ச்சிகளில் மேடைகளை அழகு படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். அப்படி பட்ட பூக்களில் மிகவும் அழகான 10 இந்திய பூக்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

1. பாரிஜாதம் அல்லது பவளமல்லி

பாரிஜாதம் அல்லது பவளமல்லி மலர்கள், இரவு மல்லிகை என்றும் அழைக்கப்படுகின்றன. இது புதர் செடி வகையை சேர்ந்தது. இந்த மலர்களில் 7 - 8 இதழ்கள் இருக்கும். தண்டு ஆரஞ்சு - சிவப்பு நிறத்தில் உள்ளன. இந்த மலர்கள், பூஜை உள்ளிட்ட ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பவளமல்லி மலர்கள் பகலில் மலராமல், இரவுநேரத்தில் மட்டும் மலரும் தன்மை கொண்டது.

பாரிஜாத மலர்

பாரிஜாத மலர் தாவரத்தின் மருத்துவ பலன்கள் பல, இவை வேர்கள் முதல் இலைகள் வரை ஒவ்வொரு பகுதியும் பல்வேறு சிறப்புப் பண்புகளையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளன. சிறிய தொட்டியில் வைத்தால் கூட அருமையாக வளர்ந்து நறுமணமிக்க மற்றும் அழகான பெரிய பெரிய பூக்களை நமக்கு கொடுக்கும். Buy Now

2. செம்பருத்தி(Sembaruthi)

செம்பருத்தி இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் வளரும் அழகான பூக்களை பூக்கும் தாவர இனம். இதன் பூ மிகவும் மருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். செம்பருத்தி சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் செம்பருத்தி மலேசிய நாட்டின் தேசிய மலராகும். இது பொதுவாகவே அழகுத்தாவரமாக தான் வளர்க்கப்படுகிறது.

இள மஞ்சள் செம்பருத்தி

இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த பூ பயன்படுவதுடன், தற்போது சந்தைகளில் பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. Buy Now

3. தாமரை

தாமரை ஒரு நீர்வாழ்த்தாவரம். இது பல்லாண்டுகள் வாழும் தன்மை உடையது. இதன் தாவரவியல் பெயர் நெலும்போ நூசிபேரா(Nelumbo nnucifera) என்பதாகும். நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே அதிகம் காணப்படும். குறிப்பாக 25 முதல் 35° cc வெப்பநிலையில் நன்கு வளரும். தாமரையின் பூக்கள்,இதழ்கள்போன்றவை அக்கால ஆயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகிறது.எகிப்திலிருந்து அசிரியாவிற்குப் பரவிய தாமரை அங்கிருந்து பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்கும் பரவியது.


தாமரைக்கு மட்டத்தண்டு கிழங்கு உண்டு.இது சேற்றில் புதைந்து இருக்கும்.நீரின் மட்டத்திற்கு ஏற்ப நீண்ட காம்புடன் கூடிய இலைகள் நீரின்மீது மிதக்கும்.தாமரையின் இலையின்மீது தண்ணீர் ஒட்டாது.மழை பொழியும்போது இலையின் மீது தண்ணீர் பட்டு ஓடி விடும்.இதற்கு காரணம் இலைகளில் கெட்டியான மெழுகுப் பூச்சு உள்ளது.இது தூசு மற்றும் பாக்டீரியா போன்றவற்றை ஒட்டாமல் பாதுகாக்கிறது.இதனால் தாமரை இலை சுத்தமாகப் பளிச்சிடுகிறது.சேற்றில் அழுக்கு நீரில் வளர்ந்தாலும் இலையும்,பூவும் சுத்தமாகவே இருக்கும். ஆசியக் கண்டத்தில் தண்ணீர் தோட்டங்களில் தாமரை பெருமளவில் வளர்க்கப்படுகிறது.தாமரையின் விதைகள் பல ஆண்டுகளுக்கு முளைக்கும் திறன் கொண்டவை.

இந்தியாவின் தேசிய மலர் தாமரை(Lotus).1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டது.தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர்.ஏனெனில் தாமரை சேறு நிறைந்த,அழுக்கான நீரில் வளர்ந்தாலும் அதன் பூக்கள் அழுக்குபடியாமல் தூய்மையாக இருக்கின்றன.சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்பதற்குப் பொருத்தமாக உள்ளது.தாமரை மலர் தன்னைதானே தூய்மைபடுத்திக் கொள்கிறது எனக் கூறுவார்கள். இப்படிபட்ட அழகிய தாமரையை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். Buy Now

Comments

Popular posts from this blog

சுட்டெரிக்கும் மாடி தோட்டம் பசுமையாக இருக்க இப்படி பஞ்சகாவியம் செய்து பயன்படுத்தி பாருங்கள் How to make Panja Kaavyam in Tamil

How to Make Panja Kaaviyam in Tamil பஞ்சகாவியம் செய்யும் முறை எப்படி? பல நூற்றாண்டுகளாக நமது தமிழ் விவசாயிகள் எப்படி செடிகளை பூச்சி தாக்குதல் மற்றும் அதிக வெப்பம் அதிக பனியில் இருந்து இயற்க்கை முறையில் உரம் செய்து காப்பாற்றினார்கள். அவர்களின் அறிவாற்றல் மிகவும் பாராட்ட தக்கது. அப்படி அவர்கள் செய்த ஒரு முறை தான் பஞ்சகாவியம் எனும் செடிகளின் அமிர்தம். அதை எப்படி செய்து ப்யன்படுத்துவது என்பதை இந்த பகுதியில் காணலாம்.  பஞ்சகாவியம் செய்ய மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து காணலாம். ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்து தற்போதைய காலநிலைக்கு ஏற்ப்ப தாயாரிக்கும் முறைக்கு ஏற்ற மூல பொருட்கள். 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் : 1. பச்சை பசுமாட்டு சாணம் – 5 கிலோ 2. பசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர் 3. காய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர் 4. பசு மாட்டுதயிர் – 2 லிட்டர் 5. பசு நெய் –...

கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சலை எப்படி சரி செய்யலாம்! Home Remedy of Heart Burn for Pregnant Womens in Tamil

 கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளில் பல பெண்களுக்கு பெரும் அவதியை கொடுப்பதில் ஒன்று தான் நெஞ்சு எரிச்சல். நிறைய கர்ப்பிணிகள் இந்த பிரச்சனைக்கு அதிக அளவில் கஸ்ட்ட படுவார்கள். இந்த பிரச்சனை கர்ப்பமாக இருக்கும் போது சிலருக்கு ஆரம்பத்தில் மட்டும் ஏற்படும் சிலருக்கோ குழந்தை பிறக்கும் வரைக்கும் கூட ஏற்படும். பெண்களின் ஹார்மோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாக சுரப்பதனால் தான் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றிற்கும், உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள வால்வானது சரியாக இயங்காமல் போகிறது. எனவே, வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்கு வந்து, எரிச்சலை உண்டாக்குகிறது. அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருக்கும் போது வாந்தி வருவதால், பெண்களால் எதையும் சரியாக சாப்பிட முடிவதில்லை. இதனால் அசிடிட்டி ஏற்பட்டு, நெஞ்சில் எரிச்சல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை நீக்க வீட்டில் உள்ள சாதாரன பொருட்களே போதும். அது என்ன அவற்றை எப்படி பயன்படுத்தி எளிதாக கர்பினி பெண்ணின் நெஞ்சு எரிச்சலை சரி செய்யலாம் என தொடர்ந்து பார்க்கலாம். சரியான உணவு பழக்கம் நெஞ்சு எரிச்சல் இருக்கும் போது, அதிகமான காரம் உள்...