Skip to main content

செத்த பிறகும் இடியிடம் அடி வாங்கும் அதிசய மனிதர்! Mysterious Facts In Tamil

வால்டர் சமர் போர்டு என்ற இந்த மனுஷன் தான் வரலாற்றின் மிகவும் துரதிர்ஷ்டவசமான மனிதர் என்று அழைக்கப்படுகிறார். பிரிட்டனை சேர்ந்த இவர் இப்படி அழைக்கப்படுவதற்கு ஒரு நல்ல காரணம் உள்ளது.


இங்கிலாந்து ராணுவத்தில் இருந்த இவரை இராணுவமானது, 1918-ஆம் ஆண்டு நடந்த முதல் உலகப்போரில் பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பியது.



அங்கு குதிரை சவாரி செய்து கொண்டிருந்த, இவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் செயலிழந்ததால் பணியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். ஆனாலும் ஆறே மாதத்தில் பழைய நிலைக்கு மீண்டு வந்த இவர் தனது புதிய வாழ்க்கையை கனடாவில் துவங்கினார்.



அங்கு சென்ற பிறகும் இவரை விட்டு வைக்காத மின்னல் சரியாக ஆறு வருடம் கழித்து 1924-ஆம் ஆண்டு அங்குள்ள ஆற்றில் இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீண்டும் தாக்கியது. அந்த தாக்குதலில் சுமார் 2 வருடம் கடினப்பட்டு பழைய நிலைக்கு வந்தார்.

பிறகு தன் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த போது மீண்டும் ஆறு வருடங்கள் கழித்து 1930-இல் ஒரு பார்க்கில் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த அவரை திரும்பவும் மின்னல் தாக்கியதில் மோசமான நிலைக்கு சென்றார். இந்த முறையை இரண்டு வருடங்கள் போராட்டத்திற்கு பின்பு உயிரை விட்டார்.



இவரது உடலானது கனடாவின் வான்கூவர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்த பிறகும் விட்டுவைக்காத மின்னல் 1936-ஆம் ஆண்டு மீண்டும் அதே ஆறு வருடங்கள் வரிசையில் இவரது கல்லறையை தாக்கி அந்த கற்களை சிதர செய்தது.



இறந்த பிறகும் கூட ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வால்ட்டர் இப்படி மின்னலால் தாக்கப்பட்டார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ள நிலையில் இப்படி இறந்த பிறகும் மின்னல் தாக்கப்பட்ட நபர் என்பதால் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டசாலி யான மனிதர் என்று இவரை எல்லோரும் அழைக்கிறார்கள். யாரிடம் என்ன சாபம் வாங்கினாரோ தெரியவில்லை இறந்த பின்பும் மின்னலிடம் இப்படி அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

சுட்டெரிக்கும் மாடி தோட்டம் பசுமையாக இருக்க இப்படி பஞ்சகாவியம் செய்து பயன்படுத்தி பாருங்கள் How to make Panja Kaavyam in Tamil

How to Make Panja Kaaviyam in Tamil பஞ்சகாவியம் செய்யும் முறை எப்படி? பல நூற்றாண்டுகளாக நமது தமிழ் விவசாயிகள் எப்படி செடிகளை பூச்சி தாக்குதல் மற்றும் அதிக வெப்பம் அதிக பனியில் இருந்து இயற்க்கை முறையில் உரம் செய்து காப்பாற்றினார்கள். அவர்களின் அறிவாற்றல் மிகவும் பாராட்ட தக்கது. அப்படி அவர்கள் செய்த ஒரு முறை தான் பஞ்சகாவியம் எனும் செடிகளின் அமிர்தம். அதை எப்படி செய்து ப்யன்படுத்துவது என்பதை இந்த பகுதியில் காணலாம்.  பஞ்சகாவியம் செய்ய மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து காணலாம். ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்து தற்போதைய காலநிலைக்கு ஏற்ப்ப தாயாரிக்கும் முறைக்கு ஏற்ற மூல பொருட்கள். 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் : 1. பச்சை பசுமாட்டு சாணம் – 5 கிலோ 2. பசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர் 3. காய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர் 4. பசு மாட்டுதயிர் – 2 லிட்டர் 5. பசு நெய் –...

இந்தியாவின் மிகவும் அழகான 10 பூக்கள்! 10 Most Beautiful Indian Flowers in Tamil

இந்தியாவின் அழகான பூக்கள் பூக்கள் என்றாலே பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது. அவைகளை பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அழகான பூக்களை இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் தலையில் சூடி கொள்ளவும், பல நிகழ்ச்சிகளில் மேடைகளை அழகு படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். அப்படி பட்ட பூக்களில் மிகவும் அழகான 10 இந்திய பூக்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். 1. பாரிஜாதம் அல்லது பவளமல்லி பாரிஜாதம் அல்லது பவளமல்லி மலர்கள், இரவு மல்லிகை என்றும் அழைக்கப்படுகின்றன. இது புதர் செடி வகையை சேர்ந்தது. இந்த மலர்களில் 7 - 8 இதழ்கள் இருக்கும். தண்டு ஆரஞ்சு - சிவப்பு நிறத்தில் உள்ளன. இந்த மலர்கள், பூஜை உள்ளிட்ட ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பவளமல்லி மலர்கள் பகலில் மலராமல், இரவுநேரத்தில் மட்டும் மலரும் தன்மை கொண்டது. பாரிஜாத மலர் பாரிஜாத மலர் தாவரத்தின் மருத்துவ பலன்கள் பல, இவை வேர்கள் முதல் இலைகள் வரை ஒவ்வொரு பகுதியும் பல்வேறு சிறப்புப் பண்புகளையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளன. சிறிய தொட்டியில் வைத்தால் கூட அருமையாக வளர்ந்து நறுமணமிக்க மற்றும் அ...

கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சலை எப்படி சரி செய்யலாம்! Home Remedy of Heart Burn for Pregnant Womens in Tamil

 கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளில் பல பெண்களுக்கு பெரும் அவதியை கொடுப்பதில் ஒன்று தான் நெஞ்சு எரிச்சல். நிறைய கர்ப்பிணிகள் இந்த பிரச்சனைக்கு அதிக அளவில் கஸ்ட்ட படுவார்கள். இந்த பிரச்சனை கர்ப்பமாக இருக்கும் போது சிலருக்கு ஆரம்பத்தில் மட்டும் ஏற்படும் சிலருக்கோ குழந்தை பிறக்கும் வரைக்கும் கூட ஏற்படும். பெண்களின் ஹார்மோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாக சுரப்பதனால் தான் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றிற்கும், உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள வால்வானது சரியாக இயங்காமல் போகிறது. எனவே, வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்கு வந்து, எரிச்சலை உண்டாக்குகிறது. அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருக்கும் போது வாந்தி வருவதால், பெண்களால் எதையும் சரியாக சாப்பிட முடிவதில்லை. இதனால் அசிடிட்டி ஏற்பட்டு, நெஞ்சில் எரிச்சல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை நீக்க வீட்டில் உள்ள சாதாரன பொருட்களே போதும். அது என்ன அவற்றை எப்படி பயன்படுத்தி எளிதாக கர்பினி பெண்ணின் நெஞ்சு எரிச்சலை சரி செய்யலாம் என தொடர்ந்து பார்க்கலாம். சரியான உணவு பழக்கம் நெஞ்சு எரிச்சல் இருக்கும் போது, அதிகமான காரம் உள்...